கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள் கைது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள் கைது, திருடிய நகைகளை தங்க கட்டிகளாக மாற்றி பதுக்கி இருந்த நிலையில், தனிப்படை போலீசார் கைது செய்தனர், தப்பி ஓட முயற்சி செய்த குற்றவாளிக்கு கையில் மாவு கட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரும்பாக்கத்தில் தொழிலதிபர் கார்த்திகேயன் என்பவர் வீடு உள்ளது. இவர் தொழில் நிமித்தமாக சென்னையில் தங்கி உள்ள நிலையில் கடந்த பத்தாம் தேதி அன்று இவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 18 சவரன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர் இது குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் உதவியாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர் இந்நிலையில் இன்று அரும்பாக்கம் பாலம் அருகே சொகுசு காரில் வந்த அஜ்மீர் பிரதாப் மற்றும் கரன் ஆகிய மூவரை விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்தனர்.
இதில் அஜ்மீர் தப்பி ஓடினார் அவரை காவல்துறையினர் துரத்தி பிடித்தபோது கீழே விழுந்து கை முறிந்தது. இவர்களை விசாரணை செய்ததில் அரும்பாக்கம் கொள்ளை சம்பவத்தை நடத்தியது தெரியவந்தது. கொள்ளையடித்த தங்கத்தை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றியது தெரியவந்தது.
இவர்களுக்கு துணையாக செயல்பட்ட இஸ்மாயில் என்பவரை காவல்துறையினர் இருசக்கர வாகனத்துடன் கைது செய்தனர். இவர்கள் அனைவர் மீதும் நாகை திருவாரூர் தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர் அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம், 18 சவரன் தங்க கட்டி ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.