கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சொந்தமான கட்டிடத்தில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்து நான்கு பேர் படுகாயம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதி .
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சொந்தமான 50க்கும் மேற்பட்ட கடைகள் அங்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது அந்தக் கட்டிடத்தில் இரண்டு கடைகளில் தனியார் (சன் கஃபே) உணவகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் உணவு அருந்துவது வழக்கம்.
இன்று காலை திடீரென அந்த உணவகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனையடுத்து அங்கு உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் (60) அவரது மனைவி ஹேமலதா (57) திருவிசநல்லூர் பகுதியை சேர்ந்த மேரி (80) எஸ்தர் (55) என்ற நான்கு பேர் படுகாயம் அடைந்தனர் படுகாயம் அடைந்த நான்கு பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர் உணவகத்தின் மேல் கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் 25 வருடங்களுக்கு முன்னது கட்டப்பட்டது இந்த கட்டிடத்திற்கு சரியான பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகிறது இவ்வாறு இந்த சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் முன் மாநகராட்சி அந்த கட்டிடத்தினை பராமரிக்க வேண்டும்என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்த சம்பவத்தால் புதிய பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.