in

புதிய தொழில்நுட்பமான AI கொண்டு மோசடி.

புதிய தொழில்நுட்பமான AI கொண்டு மோசடி.

அதிக லாபம் தருகிறோம் கூறியதால் கோடிக்கணக்கில் பணம் செலுத்திய வர்கள் ஏமாற்றம்.

தமிழக பகுதி நெய்வேலியை சார்ந்த 7 இளைஞர்களை புதுச்சேரி இணையவழி போலீசார் கைது.56 கோடி ரூபாய் மற்றும் கோடிக்கணக்கிலான கார், கம்ப்யூட்டர், ஆவணங்கள் பறிமுதல்.

புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்தவர் கோகிலா. இவரது முகநூல் வழியே தொடர்பு கொண்டு குளோபல் சாப்ட்வேர் சொல்யூஷன் என்கிற கம்பெனியில் ஆன்லைன் டிரேடிங் செய்ய தனது பெயர் மற்றும் முகவரி தொலைபேசி எண்களை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து பெங்களூரில் இருந்து இவரது தொலைபேசியில் அழைப்பு வந்து குளோபல் சாப்ட்வேர் சொல்யூஷன் மற்றும் அல்கோ மாஸ்டர் டிரேடிங் கம்பெனியிலிருந்து பேசுவதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆட்டோமேட்டிக் ரோபோடிக் சாப்ட்வேர் மூலம் ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி அதில் முதல் தவணையாக 38 ஆயிரம் ரூபாயை செலுத்தி உள்ளார். தொடர்ந்து அந்த நிறுவனம் மூலம் பல்வேறு தவணைகளாக 18 லட்சம் ரூபாயை அனுப்பிய நிலையில் ஒரு ரூபாய் கூட லாபமாக திருப்பி செலுத்தாததால் அவர்களை பலமுறை தொடர்பு கொண்டு உள்ளார் ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஜூலை மாதம் புகார் அளித்தார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் பெங்களூர் மற்றும் நெய்வேலி சேர்ந்தவர்கள் தெரியவந்தது. இந்நிலையில் காவல் ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான காவலர்கள் கொண்ட தனிப்படை நேற்று பெங்களூர் சென்று குற்றவாளிகளான ரூப் அகமது மற்றும் அவரது கூட்டாளிகளான ஜெகதீஷ், அன்சார் முஹம்மது உள்ளிட்ட ஏழு பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியா, துபாய், ஹாங்காங்,தாய்லாந்து போன்ற நாடுகளில் பல கால் சென்டர்கள் அமைத்து 500க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு ஏமாற்றி உள்ளது. ஏமாற்றும் வேலை செய்வது தெரிந்தே இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடைய 64 வங்கி கணக்கில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. மேலும் இந்த மோசடிகள் அனைத்தும் துபாயை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. முக்கிய குற்றவாளியாளர் நெய்வேலியை சேர்ந்த நவ்சர் கான் அகமது என்பவர் தலைமறைவாக இருப்பதால் போலீசார் தேடி வருவதாகவும் தெரிவித்தனர். இதேபோன்று நாமக்கல், மும்பை, துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அலுவலகங்கள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தற்போது மூன்று வங்கி கணக்குகளில் மட்டும் கடந்த 9 மாதங்களில் மோசடி செய்த பணமாக 56 கோடி ரூபாய் வந்துள்ளது. அதற்கான விபரங்களை வங்கிகளிடமும் ஏமாந்தவர்களிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அவர்களுடைய ஒரே ஒரு வங்கி கணக்கில் மட்டும் 27 கோடி ரூபாய் இந்தியா முழுவதும் உள்ள இணையவழி போலீசார் முடக்கி உள்ளனர்.

இது சம்பந்தமாக அனைத்து மாநில போலீசாருக்கும் தெரிவிக்கப்படும்.
என்றும் மோசடிக்காரர்கள் இருந்து நான்கு சொகுசு கார் ,ஒரு விலை உயர்ந்த பைக், வேன், கம்ப்யூட்டர் கிரெடிட் கார்டுகள் டெபிட் கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வருடம் மட்டும் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 346 பேர் விவரங்களை இந்த நிறுவனம் இணையதளம் மூலம் பெறப்பட்டு வைத்துள்ளனர் என்றும் இவர்கள் அனைவரிடம் விசாரித்துப் பிறகு எவ்வளவு கோடி ஏமாற்றப்பட்டுள்ளது என்றும் எத்தனை பேர் ஏமாந்தார்கள் எனவும் தெரியவரும் என தெரிவித்தனர்.

What do you think?

புதுச்சேரி…கோர்க்காடு ஏரியை துணைநிலை ஆளுநர் ஆய்வு

வானூர் பட்டாணுர் சுங்கச்சாவடியில் கட்டணம் குறைவு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி