in

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று உணவகத்தில் இலவச உணவு


Watch – YouTube Click

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று உணவகத்தில் இலவச உணவு

 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் இன்று ஒரு நாள் முழுவதும் உணவகத்தில் இலவசமாக பொது மக்களுக்கு உணவு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்.

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் 71 ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் திமுகவினர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் தேவா தலைமையில் புலிவலம் பகுதியில் உள்ள திமுக நிர்வாகி கார்த்தி என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து 71 கிலோ எடையுள்ள உதயசூரியன் அச்சிடப்பட்ட கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதேபோன்று திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்வில் திமுக நகர செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ரஜினி சின்னா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று திமுகவினர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு களையப்படும்

ஆண்டவன் ஒரு பொம்பள புள்ளய கொடுக்கலையே சாமி