புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச கைக்கணி
புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 1607 ஆசிரியர்களுக்கு இலவச கைக்கணினியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர்.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி எனப்படும் நடுவன அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின், தகவல் தொழில்நுட்ப வளத் தொகுப்பின் கீழ், அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச கைக்கணினி (டேப்லெட்) வழங்கும் நிகழ்வு காராமணிக்குப்பத்தில் உள்ள ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு அரசு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 1607 ஆசிரியர்களுக்கு இலவச கைக்கணினியை வழங்கினார்.
இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவை துணை தலைவர் ராஜவேலு, கல்வித்துறை செயலர் ஆசிஷ் மாதவ்ராவ் மோரே, கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.