சைபர் கிரைம் போலீசார் பதிவு வழக்கிற்கு சொந்த ஜாமினில் விடுவிப்பு
திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் பதிவு வழக்கிற்கு சொந்த ஜாமினில் விடுவிப்பு. நீதிபதி நீதிமன்ற காவலுக்கும் நீதிபதி அனுப்பவில்லை.
சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை பற்றி தவறாக பேசி நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுபட சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார் ஆனால் கோவை சிறையில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறியதை அடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
திருச்சயில் அவர் மீது முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே திருச்சிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் ஜூன் 4ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளர் லதா திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணைக்காக இன்று சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டு தொடர்ந்து கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
சவுக்கு சங்கர் இந்த வழக்கில் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்ற காவலுக்கும் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா அனுப்பவில்லை. மீண்டும் புழல் சிறைக்கு சவுக்கு சங்கர் கொண்டு செல்லப்பட்டார்.