in

புதுச்சேரியில் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்துக்கான இலவச அரிசிக்கான பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு

புதுச்சேரியில் கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்துக்கான இலவச அரிசிக்கான பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னதாக தீபாவளி பண்டிகையையொட்டி 10 கிலோ அரிசி, 2 கிலோ சரக்கரை வழங்கும் பணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவக்கி வைத்தனர்.

அதே நேரத்தில் ரேஷன் கடையை திறந்து இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கான இலவச அரிசிக்குரிய பணத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துறையின் இயக்குநர சத்தியமூரத்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலவச அரிசி வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.600 வீதம் இரண்டு மாதங்களுக்கு ரூ.1,200ம், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.300 வீதம் இரண்டு மாதங்களுக்கு ரூ.600ம் அவரவர் வங்கிக் கணக்கில் இன்று முதல் வரவு வைக்கப்பட உள்ளது. இதன்மூலம் 3 லட்சத்துக்கு 35 ஆயிரத்து 595 குடும்ப அட்டைதாரர்கள், இதில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்கள்-2 லட்சத்து 4 ஆயிரத்து 616; மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 979 பேர் பயன்பெறுவர். இதற்காக அரசு ரூ.32.41 கோடி செலவிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

What do you think?

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

திருவுக்கரையில் உள்ள தேசிய கல்மர பூங்காவில் சிறப்பு தூய்மை பணி நடைபெற்றது.