in

பத்திரிக்கை சுதந்திரம் என்பது அனைத்துமே திமுகவிற்கு விலை போய் விட்டது எம் ஆர் விஜயபாஸ்கர் பேச்சு


Watch – YouTube Click

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் கரூர் பாராளுமன்ற வேட்பாளர் தங்கவேலு இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்களின் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் திரு வி கா மற்றும் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில்

இந்தியா முழுவதும் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் தொலைக்காட்சிகளில் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்து வருகின்றனர்

தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் பத்திரிக்கை என்பது அனைத்துமே திமுகவிற்கு விலை போய் விட்டது இதுதான் உண்மை

கருத்து திணிப்பை யாரும் நம்ப வேண்டாம் அண்ணா திமுக தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் உருவாக்கிய இயக்கம் புரட்சித் தலைவர் அம்மா வளர்த்த இயக்கம் எடப்பாடி யார் அவர்கள் கட்டிக் காத்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் தனி பெரும் கட்சி என்பதை முடிவெடுக்கக் கூடிய இந்த தேர்தல் அதுதான் உண்மை

2014 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக புரட்சித்தலைவி அம்மா சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் போது இதே ஊடகங்கள் தான் கருத்து கணிப்பு சொன்னது தமிழகத்தில் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று சொன்னார்கள் ஆனால் அதற்கு நேர்மாறாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று புரட்சித்தலைவி அம்மா ஆட்சி அமைந்தது

இரண்டாவது முறையாக வெற்றி பெற்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் மூன்றாவது முறையாக ஆர்டிக் சாதனை பெற்று தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்திருக்கும்

கடந்த முறை பாராளுமன்றத்தில் தோற்றாலும் ஒரு பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை பெற்றிருந்தார்

அதற்கு முன்பாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவினர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலைதான்

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் திமுகவினர் டெபாசிட் இழந்தனர் இதையும் திமுகவினருக்கு நினைவு படுத்தி ஞாபகப்படுத்த வேண்டும்

புரட்சித்தலைவி அம்மா பீனிக்ஸ் பறவை போல ஒரு தோல்வி இருந்தால் அதன் பிறகு மிகப்பெரிய வெற்றி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைக்கும்

இந்த தேர்தலில் நாங்கள் தனித்து நிற்போம் எங்களுடைய வாக்கு சதவீதம் நிமிர்த்தி காட்டுவோம் என எடப்பாடியார் அவர்களின் முயற்சி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அம்மாவின் அரசு எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்ற அடித்தளமாக இந்த தேர்தல் அமைய வேண்டும்.

கரூர் பாராளுமன்ற வேட்பாளர் தங்கவேலு இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி உலக நாயகி கோவிலில் அம்மன் நகை திருட்டு போலீசார் விசாரணை

திருச்செந்தூர் கடற்கரையில் அருகில் 800 பரதநாட்டிய கலைஞர்கள் நாட்டியமாடி உலக சாதனை படைத்தனர்