in

பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் புதுச்சேரியில் கோலாகளமாக கொண்டாட்டம்


Watch – YouTube Click

பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் புதுச்சேரியில் கோலாகளமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவிடத்தில் இரு நாடுகளின் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் பிரெஞ்சு மக்கள் அதிகம் வசிக்கும் புதுச்சேரியில் நேற்று மாலை முதல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் தலைநகரம் பாரீஸில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து, மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தை நினைவு கூறும்வகையில்  புதுச்சேரி கடற்கரையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்த பிரான்ஸ் நாட்டிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட இந்திய வீரரகள் மற்றும் பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மற்றும் சென்னை பிரெஞ்சு துணைத் தூதர் லிசே டல்போட் பரே, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், உள்துறை அதிகாரிகள், பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் ஆகியோர் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் இந்தியா – பிரான்ஸ் இரு நாட்டு தேசியக்கொடிகள் ஒருசேர ஏற்றப்பட்டு இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

இன்று மாலை பிரெஞ்சு தூதரக வாயில் மற்றும் கடற்கரைச்சாலையில் நடைபெறும் வண்ணமயமான விழாவில் வாணவேடிக்கை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு பிரெஞ்சு துணை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

கீழ்வேளூர் எம்எல்ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

காங்கிரஸ் இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டுமெனவும் நிர்வாகிகளிடையே கிஷன் ரெட்டி வலியுறுத்தி உள்ளார்.