கடலை விவசாயம் முதல் செக்கில் எண்ணெய் ஆடி விற்பனை
கடலை விவசாயம் முதல் செக்கில் எண்ணெய் ஆடி விற்பனை செய்யும் விவசாயி, விவசாயி தொழிலாளி, முதலாளி என்ற மூன்று நிலைகளில் முன்னுதாரணமாக விளங்கும் விவசாயிக்கு குவியும் பாராட்டுகள்.
தனது நிலத்தில் முப்போகம் நிலக்கடலை சாகுபடி செய்து அவற்றை பதப்படுத்தி தனது சொந்த செக்கு பட்டறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை, பாரம்பரிய முறையில் நிலக்கடலை சாகுபடி அதேபோன்று செக்கு எண்ணெய் ஆடி விற்பனை அசத்தும் விவசாயி.
பலர் சுத்திகரிக்கப்பட்ட ரீபைன்ட் எண்ணெய் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது பாரம்பரிய முறையில் நிலக்கடலை எண்ணெய் விரும்பி வாங்கி செல்லும் கிராம மக்கள், செக்கு எண்ணெய் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம் என தெரிவிக்கும் வடகரை விவசாயி சாகுல் .
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கடலங்குடி திருச்சிற்றம்பலம் குறிச்சி வடகரை உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி சாகுல் இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஆண்டுதோறும் மூன்று போகம் நிலக்கடலை சாகுபடி செய்து வருகிறார் நிலக்கடலை சாகுபடி பாரம்பரிய முறையில் இயற்கை உரம் கொண்டு சாண உரம் புண்ணாக்கு மண்புழு உரம் ஆகியவை கொண்டு இயற்கை முறையில் சாகுபடி செய்யும் நிலக்கடலை அதிக மகசூல் தருவதோடு தரமான நிலக்கடலையாக உள்ளது.
தனது நிலத்தில் விளையும் தரமான நிலக்கடலை கொண்டு தனக்கு சொந்தமான செக்கு பட்டறையில் அவரே நிலக்கடலையை பதப்படுத்தி காயவைத்து அவற்றை தோல் உரித்து தனது சொந்த செக்கு பட்டறையில் எண்ணெய் தயாரிக்கிறார் தற்பொழுது மக்கள் அதிகம் சுத்திகரிக்கப்பட்ட ரீபைண்ட் எண்ணெய்களை பயன்படுத்தி வரும் நிலையில் அவற்றை மாற்ற வேண்டும் இயற்கை முறையில் சத்தான நிலக்கடலை மூலம் செக்கு பட்டறையில் தயாரிக்கும் எண்ணெய்யை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே தனது நோக்கம் என விவசாயி சாகுல் கூறுகிறார் ஆதிகாலத்தில் மக்கள் பெரும்பாலும் செக்கு பட்டறையில் தயாரித்த இயற்கை எண்ணெய் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பெரும்பாலான மக்கள் சுத்திகரிக்கப்பட்ட ரீபைண்டு எண்ணெய் பயன்படுத்துகின்றனர்.
இதனால் பல்வேறு நோய்கள் உடல் உபாதைகள் ஏற்படுவதாலும் மேலும் விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் விவசாயிகள் முன்னேற வேண்டும் என்பது இலக்காக கொண்டு தான் முதற்கட்டமாக தானே இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி செய்து அவற்றை தனது சொந்த செக்கு பட்டறையில் எண்ணெய் தயார் செய்து குறைந்த விலைக்கு விற்பதாகவும் தற்பொழுது மக்கள் அதிகம் இதனை விரும்பி வாங்கி செல்வதாகவும் விவசாயி சாகுல் கூறுகிறார்.
இதேபோன்று மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக கடின உழைப்பு விடாமுயற்சி தன்னம்பிக்கையோடு சாகுல் தானே விவசாயி தானே தொழிலாளி தானே முதலாளி என்ற நிலையில் விவசாயம் செய்து செக்கு பட்டறை நடத்தி எண்ணெய் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.