in

புதுச்சேரியில் நடைபெற்ற காய், கனி, விதை மற்றும் உணவு திருவிழா

புதுச்சேரியில் நடைபெற்ற காய், கனி, விதை மற்றும் உணவு திருவிழா

 

தின்பண்டங்கள் மற்றும் உணவுகளை ருசித்து பார்த்து உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு நுகர்வோர் சங்கம் மற்றும் நம்மாழ்வார் இயற்கை உழவர் சாகுபடியாளர் சங்கம் இணைந்து நடத்திய பாரம்பரிய காய், கனி, விதை, மற்றும் உணவு திருவிழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி கண்காட்சியில் இடம் பெற்று இருந்த உணவுகளை ருசித்து பார்த்து உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.

இந்த திருவிழாவில் புதுச்சேரி மற்றும் அருகில் உள்ள தமிழக பகுதிகளைச் சார்ந்த இயற்கை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைந்த காய், கனி விதை மற்றும் இயற்கை உணவு தானியம் நேரடி விற்பனை செய்யும் வகையில் 80 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது

ஒவ்வொன்றிலும் இயற்கையாக விளைவிக்க பட்ட பாரம்பரிய அரிசி வகைகள், கேழ்வரகு, கம்பு, மக்காசோளம், உள்ளிட்ட சிறுதானியம் பழ வகைகள், காய்கறிகள், மரக்கன்றுகள் விதைகள், கீரை வகைகள், மற்றும் நவதானியங்களால் செய்யப்பட்ட காரம், இனிப்பு போன்ற தின்பண்டங்கள், உளுந்து, துவரை, கடலை, போன்ற பல்வேறு வகையான இயற்கை மூலிகை பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

இன்று ஒரு நாள் நடைபெற்ற இந்த உணவு திருவிழாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உணவுப் பொருள்களையும் வாங்கி சென்று பயனடைந்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர். உணவு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு நுகர்வோர் சங்கம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

What do you think?

வேப்பூர் அருகே வனதுர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு கண் சிகிச்சை முகாம்