புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறப்பு அறிவிப்பு, மார்க்சிஸ்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று ஜி.ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் பேட்டி அளித்தார். மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு தமிழ் மாநில அரசியல் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், புதுச்சேரியில் நிருபர்களிடம் பேசுகையில், ஆர்எஸ்எஸ் விழாக்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது நாடு எதை நோக்கி பயனிக்கிறது என்பதை காட்டுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
முதல் அமைச்சர் ரங்கசாமி ரேஷன் கடைகளை திறந்து மீண்டும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி நடத்திய போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும். நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். நாடு முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
மத்திய அரசு புதிதாக 29 தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தியிருக்கிறது. இந்த சட்டங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளது எனவே இந்த சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கள்ள சாராயத்தை ஒழிக்க படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஒரு பொய்யான தகவலை நாடாளுமன்றத்தில் நிர்மலா சீத்தாரமன் கூறியுள்ளார். விலைவாசி என்பது கட்டுபடுத்தப்பட்டுள்ளது என்பது தவறான ஒன்று.
மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார்.