in

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று காலை கந்த சஷ்டி திருவிழா வெகுசிறப்பாக தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி பச்சை ஆடையணிந்து விரதமிருந்தனா்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று காலை கந்த சஷ்டி திருவிழா வெகுசிறப்பாக தொடங்கியது. முருகப்பெருமான் சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார்.

அந்தநாளே கந்த சஷ்டியாக உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு கடற்கரையில் நடந்ததாக புராண வரலாறு. எனவே கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி வருகின்ற 7 ம் தேதி மாலை சூரசம்ஹாரமும், மறுதினம் தெய்வானை திருக்கல்யாணத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவு பெருகின்றது.

கந்த சஷ்டி திருவிழாவினை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு,1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் துலா லக்கனத்தில் அருள்மிகு ஜெயந்திநாதா் யாகசாலைக்கு ஏழுந்தருளினாா். அதனை தொடா்ந்து கந்தசஷ்டி திருவிழா காலையில் விக்னேஸ்வர பூஜை அனுக்ஞை மகா சங்கல்பத்துடன் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இதனை அடுத்து விரதம் இருக்க வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து விரதம் இருக்க துவங்கினர்.

கந்த சஷ்டி திருவிழாவில் முதல் நாளான இன்று யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதை அடுத்து சுவாமி ஜெயந்திநாதர் மற்றும் வள்ளி தெய்வானை அம்பாளுக்கு பால் பழம் பன்னீர் சந்தனம் விபூதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

இன்றிலிருந்து முதல் 5 தினங்களுக்கு நண்பகலில் அபிஷேகம் மற்றும் யாகசாலை தீபாராதனை நடைபெறும். மதியம் தங்க சப்பரத்தில் அருள்மிகு ஜெயந்திநாதா் யாகசாலையில் இருந்து ஏழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாச மண்டபம் ஏழுந்தருளி சிறப்பு தீபாரதனை நடைபெறும்.

அதனை தொடா்ந்து மாலையில் திருவாடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அருள்மிகு ஜெயந்திநாதருக்கு அபிஷேகமும், இரவு தங்கத்தோில் கிாிவீதி உலா நடைபெற்று திருக்கோயில் சேரும் நிகழ்வு நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழாவிற்காக லண்டன் சிங்கப்பூா், மலேசியா இலங்கை மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து தங்கி ஆறுநாட்களும் சஷ்டி விரதமிருக்கின்றனா். பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடனாக அங்கப்பிரதஷ்ணம், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடிம் எடுத்தல் போன்றவைகள் நடைபெற்றன. திருக்கோவில் கலையரங்கத்தில் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை கலை நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. பக்தா்களுக்கு தங்கும் வசதி, குடிநீா் வசதிகள் மாவட்ட நிா்வாகத்தினரால் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் தலைமையில் விாிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா், இணை ஆணையா் மற்றம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாாிகள் செய்திருந்தனா்

What do you think?

அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அன்னை காந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழா சிகர நிகழ்ச்சியான மறுவீடு பட்டணப்பிரவேச விழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 3 பேர் கைது