in ,

திருச்சி காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்

திருச்சி காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் – பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிப்பு.

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு மூன்று நாட்கள் பூஜை நடைபெற்று வந்தது .

இந்தநிலையில்  மூன்றாவது நாள் அனைத்து சிலைகளும் மாலை 6 மணிக்கு மேல் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கபட்டு வருகிறது .

மாநகரில் உள்ள சிலைகள் காவிரி பாலத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு கரைக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சிலைகள் விசர்ஜனத்தையொட்டி திருச்சி காவிரி பாலத்தில் தடுப்பு கட்டைகள் , ஆங்காங்கே மேடை, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையிலும், சிலைகள் கரைக்கப்பட உள்ள காவிரி பாலத்திலும் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சிலைகள் ஊர் வலத்தை முன்னிட்டு ஊர்வலம் செல்லும் பாதையில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் சமயத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் போக்குவரத்தில் அவ்வப்போது சிறு, சிறு மாற்றங்கள் செய்யப்படும் போக்குவரத்து சரி செய்யபட்டு வருகிறது.

What do you think?

GOAT குட்டி ஜீவன் யார் தெரியுமா?

மதுரை தல்லாகுளம் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்