பழனியில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன
பழனியில் இந்து அமைப்பினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த 200 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழனி சுற்றுவட்டார பகெதிகளில் 276 சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டு இருந்த்து.
இதில் இந்து முன்னணி 140 சிலைகளும், இந்து சக்தி சங்கம்ம் 28 மேற்பட்ட பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று அடிவாரம் பாதவிநாயகர் கோவிலில் இருந்து இந்து சக்தி சங்கம்ம் சார்பில் கிரிவல பாதையில் சிலையில் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இந்து முன்னணி சார்பில் அடிவாரம் பூங்கா சாலையில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், காரமடை வழியாக சண்முகநதி ஆற்றில் கொண்டு சென்று கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்து சக்தி சங்கமம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கிரிவலப் பாதையில் விநாயகர் சிலைகளை பல்லக்கில் எடுத்து வந்து சண்முக நதி ஆற்றில் கரைத்தனர்.
மேலும் நாளையும் இந்து அமைப்பு சார்பில் ஊர்வலம் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.