in

திருச்சியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த கும்பல் கைது

திருச்சியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த கும்பல் கைது

 

திருச்சியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த கும்பல் கைது -தேசிய வங்கிகளிலும் வைத்து மோசடி பரபரப்பு தகவல்

திருச்சி பாலக்கரையில் உள்ள மணப்புரத்தில் ஒருவர் தங்க நகைகளை கொண்டு வந்து அடகு வைத்துள்ளார். அடகு வைத்து பணமும் பெற்று சென்று உள்ளார். பின்பு 12க்கும் மேற்பட்ட தங்க வளையல் நகை செட்டுகளை கொண்டு வந்து அடகு வைக்க முயன்ற பொழுது மணப்புரத்தில் உள்ள ஊழியர் ஒருவர் சந்தேகம் அடைந்து தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு நகை அடகு வைத்த நபர்கள் தலைமறைவாகி விட்டனர். பின்பு பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி தங்க நகையை
அடகு வைத்தவர்களை தேடி வந்தனர். போலி தங்க நகையை
6 லட்ச ரூபாய்க்கு வைத்து மோசடி செய்ததுள்ளனர்.

செப்பு கம்பியில் தங்கம் முலாம் பூசி ஆறு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு பாலக்கரையில் உள்ள மணப்புரத்தில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். அதில் தங்கத்தின் மதிப்பு மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

மீதி 5 லட்சம் ரூபாய்க்கு தங்கம் இல்லை மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தினர் பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் திருச்சியில் 12 இடங்களில் இதே போல் இவர்கள் நகைகளை வைத்துள்ளனர். மணப்புரம், முத்தூட் தேசிய வங்கிகளிலும் இதே போல் நகைகளை வைத்து அதிகமான அளவு பணத்தை வாங்கி உள்ளனர். சென்னையில் ஒருவர் இதை தொழிலாக செய்து வருவதாகவும் அவரிடம் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த கும்பல் நகைகளை அடகு வைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலி தங்க நகை மோசடி செய்த வழக்கில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சரவணன், டேவிட், ராம்குமார் 3 பேரையும் குற்றவியல் நீதிமன்றம் எண் 2ல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

What do you think?

தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சம்

தொட்டியத்தில் போலீஸ் சீருடையில் வந்து பெட்ரோல் பங்கில் தகராறு