போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும்
போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என திருவாரூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பேட்டி.
திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து எஸ்பி ஜெயக்குமார் தீவிர சோதனைக்கு உத்தரவிட்டார் இதனையடுத்து நடைபெற்ற சோதனையில் 150 கிலோ குட்கா, ஒரு கார், இருச்சர வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது…
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டொரு தினங்களாக போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில், கஞ்சா விற்ற வழக்கில் 13 நபர்கள், குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்ததாக 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிவலம் பகுதியில் உள்ள கடையில் நடந்த சோதனையில் கிடைத்த தகவலின்பேரில் நீடாமங்கலம் முனியப்பன் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதில் 8 பைகளில் இருந்த 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு கார், இரு பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தாலோ, விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் அவர்கள் சிறையில் அடைக்கபடுவார்கள் என தெரிவித்தார்.