in

குப்பை இல்லா கிராமம், மற்றும் பாலிதின் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

குப்பை இல்லா கிராமம், மற்றும் பாலிதின் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

 

குப்பை இல்லா கிராமம், மற்றும் பாலிதின் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடு துறையை அடுத்துள்ளது சித்தர்காடு. இங்கு துப்புரவு பணியாளர்கள், மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட குப்பை இல்லாத கிராமம் மற்றும் பாலிதின் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். பேரணியை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தொடங்கி வைத்தார்.

பேரணி சித்தர்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி,சித்தர்காடு கிராமம் முழுவதும் வீதி வீதியாக சென்றது, பேரணியில் மாவட்ட கவுன்சிலர் குமாரசாமி, மற்றும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

What do you think?

மத்திய மாநில அரசுகளை கண்டித்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளில் புகுந்து அண்டா குண்டாக்களை திருடும் கும்பல்