in ,

காரியாபட்டி பேரூராட்சிக்கு குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்துள்ள கழிவுநீரால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்

காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு பகுதியில் குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்துள்ள கழிவுநீரால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் – விளம்பர மாடல் திமுக அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சொந்த தொகுதியின் அவலம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஆர்.கே.செந்தில் என்பவர் பேரூராட்சி சேர்மனாக உள்ளார்.

இந்த நிலையில், காரியாபட்டி தாலுகா அலுவலகம் அருகே பேரூராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு மற்றும் 12வது வார்டு பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காரியாபட்டி பேரூராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில் தெருவில் கழிவுநீர் வாறுகால்களை கடந்த ஓராண்டிற்கும் மேலாக முறையாக சுத்தம் செய்ய வில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், வைத்தீஸ்வரன் கோவில் தெரு முழுவதும் பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு கழிவுநீர் நிறைந்து வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும், இதனால் காய்ச்சல், தலைவலி, உடல் அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போதைய விளம்பர திமுக அரசின் நிதிஅமைச்சர் தங்கம்தென்னரசு வின் சொந்த தொகுதியில் இத்தகைய அவலம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த கழிவுநீர் பிரச்சினை குறித்து காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி தேர்தல் நேரத்தில் மட்டும் தங்களை திமுக வினர் வெற்று வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற நிலையில் காரியாபட்டி பேரூராட்சி திமுக சேர்மன் தற்போது வரை தங்கள் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய வரவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக 12வது மற்றும் 10வது வார்டு பகுதிகளில் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 10 மற்றும் 12வது வார்டு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

What do you think?

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்