சிலிண்டருக்கு மாலை, சைக்கிளில் விறகு மண்வெட்டியுடன் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19- ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.
இறுதி நாளான இன்று நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் விஜயராகவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக அவர் நாகூர் ரவுண்டானா பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் கேஸ் சிலிண்டருக்கு மாலையிட்டு சைக்கிளின் கேரியலில் விறகுகளை வைத்து அதன் மேல் மண்வெட்டியை வைத்து வாக்கு சேகரித்த படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மனு தாக்கல் செய்ய வந்தார்.
அப்போது நாகூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுயேச்சை வேட்பாளருக்கு நீர்மோர் கொடுத்து அனுப்பி வைத்தனர் அப்பகுதி மக்கள், இதனை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி 200 மீட்டருக்கு முன்பாகவே போலீசார் மாட்டு வண்டியில் செல்ல அனுமதிக்கவில்லை.
பின்னர் நடந்து வந்து நாகை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜானி டாம் வர்கீஸிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் சுயேச்சை வேட்பாளர் விஜயராகவன்.