in ,

மோகனூர் பெருமாள் ஆலயத்தில் ஆடிமாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கருட சேவை

மோகனூர் பெருமாள் ஆலயத்தில் ஆடிமாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கருட சேவை

 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹா’ரத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெஙகட்ரமண பெருமாள் ஆலயத்தில் ஆடிமாத திருவோண நட்சத்திர தினத்தை முன்னிட்டு நேற்று மாலை கருட சேவை மிக விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக உற்சவர் எம்பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் பட்டாச்சாரியார்கள் சிறிய பல்லாக்கில் தோலில் தூக்கி திருக்கோவிலை சுற்றி வந்தனர்.

அப்போது கோவிலில் உள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் பத்மாவதி தாயார் தன்வந்திரி, மூலவர் எம்பெருமான் ஆகியோருக்கு மகா தீபம் காண்பிக்கப்பட்டது.

பின்னர் கோவில் முன் உள்ள கொடிக்கம்பத்தை சுற்றி வந்து அப்போது நட்சத்திர தீபம் கும்ப தீபம் காண்பிக்கப்பட்ட பின் மீண்டும் கருட சேவையில் எம்பெருமான் திருக்கோவிலை வந்தடைந்தார்.

இதில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளை வணங்கிச் சென்றனர்.

What do you think?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலத்தில் பெண் பக்தர்கள் ஜால்ரா மற்றும் கோலாட்டத்துடன் நடனமாடி கிரிவலம்

மோகனூர் பெருமாள் ஆலயத்தில் ஆடிமாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சத்தியநாராயண பூஜை