in

 காய்சினிவேந்த பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கருட சேவை

 காய்சினிவேந்த பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கருட சேவை

 

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் மூன்றாவது கோவிலான திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்தர் ஆகிய பெருமாள்கள் மூன்று கருட வாகனங்களில் எழுந்தருளிய கருட சேவையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களில் 3வது ஸ்தலமான திருப்புளியங்குடி காசினிவேந்தர் பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி காய்சினிவேந்தர் பெருமாள் காலையில் பல்லக்கில் வீதி புறப்பாடும் இரவில் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.

ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூபம், காலை 5.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி, பின்னர் திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் கருட சேவையை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளப்பிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தர் ஆகிய மூன்று பெருமாள்களும் திருப்புளியங்குடி கோவில் வளாகத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

தீபாராதனைக்கு பின்னர் மூன்று கருட வாகனங்களில் மூன்று பெருமாள்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தனர். திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவிலில் கடந்த 1957 ஆம் ஆண்டு வரை ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் ஆகிய மூன்று சுவாமிகளும் கருட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று உள்ளது.

அதன் பின்னர் கடந்த ஆண்டு வரை நடைபெற்ற பங்குனி திருவிழாக்களில் திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கருட சேவை மட்டும் நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் ஆகிய சுவாமிகள் கருட வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடைபெற்றது. இதனால் கருட சேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

9வது திருவிழாவை முன்னிட்டு மார்ச் 30 ந்தேதி இரவில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. ஏப். 1ந் தேதி புஷ்ப யாகம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்து உள்ளனர்.

What do you think?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் சிறப்புரை

சிதம்பரம் அருகே காவல்துறை சார்பில் ஒன்றிணைவோம் விழிப்புணர்வு கருத்தரங்கம்