in

குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்

குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

மங்கநல்லூர் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம் தலைமை தாங்கினார்.

மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் க.அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், நிர்வாகிகள் வக்கீல் பிரபாகரன், மதிவாணன்,மகேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம் எல் ஏ கலந்து கொண்டு பேசினார். இதில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவிற்கு நன்றி தெரிவித்தல், திமுக முப்பெரும் விழா கொண்டாடுவது, கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது நிர்வாகிகள் சுந்தர்ராஜன், சக்தி ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் குத்தாலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை எம் சங்கர் நன்றி கூறினார்.

What do you think?

நடிகர்களை தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்படுத்த முடியாது

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு…. அனுமதி கிடைக்குமா? பதிலளிக்க உத்தரவு