கஞ்சாவை பயன்படுத்த அனுமதி ஜெர்மனி குதூகலம்
ஜெர்மனியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
உலகத்தில் அதிக நாடுகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களில் கஞ்சாவும் ஒன்றும். அப்படியான இந்த கஞ்சா பயன்பாடு ஜெர்மனியில் சட்டபூர்வமாக்கப்பட்டது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இனிமேல் ஜெர்மனி நாட்டில் இருக்கும் 18 வயதினோர் 25 கிராம் கஞ்சாவை தங்களுடைய கையில் வைத்து கொள்ளலாம்.
அதைப்போல, ஒரு வீட்டில் 3 கஞ்சா செடி வரை வளர்த்து கொள்ளலாம். ஏற்கனவே, கஞ்சாவை பயன்படுத்த சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், இந்த சட்டம் தற்போது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. மேலும், ஜெர்மனியில் வருகின்ற ஜூலை மாதம் 1-ஆம் தேதியிலிருந்து மக்கள் கஞ்சா விற்பவர்களிடம் இருந்து 50 கிராம் வரை கஞ்சா வாங்கி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளித்து அந்த சட்டம் அமுலுக்கு வந்து இருக்கும் நிலையில், மிகப்பெரிய ஐரோப்பிய நாடாக ஜேர்மனி மாறியது. இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி விடக்கூடாது என இந்தியா உட்பட நாடுகளில் கஞ்சா பயன்பாட்டுக்கு தடைவிதிக்க பட்டுள்ள நிலையில், ஜெர்மனியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது பேசும்பொருளாக வெடித்துள்ளது. ஜெர்மனியில் இருக்கும் மக்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் சில நாடுகளில் இருந்து இதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.