in

செஞ்சி வாரச் ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 6 கோடி வரை ஆடுகள் விற்பனை

செஞ்சி வாரச் ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 6 கோடி வரை ஆடுகள் விற்பனை

 

செஞ்சி வாரச் ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 6 கோடி வரை ஆடுகள் விற்பனை அமோகம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு ஆந்திரா கர்நாடகா கேரளா புதுச்சேரி மாநிலங்களிலிருந்தும் மற்றும் தேனி, கம்பம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள் என்பதால் செஞ்சி வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக உள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தையான இன்று அதிகாலை 2 மணி முதலே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர்.

மேலும் விற்பனைக்காக சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

இதனால் அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை சுமார் 6 கோடிகளுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்….

What do you think?

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் தலைவர் பி.ஜேசுராஜா

 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வினை திண்டிவனம் கல்வி மாவட்ட இடைநிலை அலுவலர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்