in

செஞ்சி வாரச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ 3 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை


Watch – YouTube Click

செஞ்சி வாரச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ 3 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை

 

தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வியாபாரிகள் வராததால் ஆடுகள் விற்பனை குறைவு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும் 150ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த வார சந்தையில் ஆடு, மாடுகள், அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம், முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள் என்பதால் செஞ்சி வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக உள்ளது.

இந்நிலையில் வரும் 11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் செஞ்சியில் ஆட்டு சந்தை இன்று காலையில் கலை கட்டியது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தையான இன்று அதிகாலை 2 – மணி முதலே விவசாயிகள் தங்களது வளர்ப்பாடுகளையும், வெளிமாவட்டத்திலிருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்ப்பதற்காக கொண்டு வந்தனர், ஏராளமான வியாபாரிகள் அதை வாங்கிச் செல்வதற்காக வாகனங்களில் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர்.

மேலும் விற்பனைக்காக சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர்.

குறிப்பாக வரும் 11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி ரூபாய் 7ஆயிரம் முதல் 10ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூபாய் 8ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

இதனால் சுமார் ரூபாய் 3 கோடிகள் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகளும் விவசாயிகளும் தெரிவித்தனர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வியாபாரிகள் அதிக அளவில் வராததால் ஆடுகளின் விலை குறைவாக விற்க்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

நவீன ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் ஆய்வு

பள்ளிவாசலில் வாக்குகள் சேகரித்த முன்னாள் அமைச்சர்