in

Good Bad Ugly Movie Review

Good Bad Ugly Movie Review

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘குட் பேட் அக்லி’ மைத்ரி Movies இன் முதல் தமிழ் பட தயாரிப்பாகும். ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான அஜித் குமாரின்’குட் பேட் அக்லி’ படத்தை ரசிகர்கள்உற்சாகத்துடனும் கொண்டாடினர்.

அஜித் திரிஷா நடிப்பில் நேற்று உலகம் முழுதும் வெளியான ‘குட் பேட் அக்லி’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்.

தனது மனைவி ரம்யா (த்ரிஷா) மற்றும் மகன் விஹான் (கார்த்திகேய தேவ்) ஆகியோருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ.

தனது Ganster தொழிலை விட்டு விட்டு செய்த தவறுக்காக ஜெயிலுக்கு செல்கிறார் அஜித். தனது குடும்பத்திற்கு ஆபத்து என்று தெரிய வரும் பொழுது ஸ்பெஷல் Permission…னில் வெளியே வருகிறார் அஜித்.

அஜித்தின் மகனை திட்டமிட்டு போதை பொருள் வழக்கில் சம்பந்தப்படுத்தி தவறாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் போது பிரச்சனைகள் அவரைத் தாக்குகின்றன.

ஆயுதங்களை மகனுக்காக கீழே போட்டவர், இந்த ஏகே திரும்பி வர மாட்டேன் என்று சபதம் செய்தவர் மீண்டும் Ganster உலகத்திற்குள் நுழைகிறார். இதற்கு காரணம் அர்ஜுன் தாஸ் என்று தெரிய வருகிறது.

தனது மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே மீதி கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் குமாருக்கு பஞ்சம் இல்லாமல் ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகள். I am not Frank, it is a prank,”மற்றும், “A+B=C”. டயலாக் செம மாஸ்.

வில்லத்தனத்தில் என்னை அடிச்சுக்க ஆள் இல்லை என்ற அளவிற்கு மிரட்டி இருக்கிறார் அர்ஜுன் தாஸ். அஜித் குமாரைத் தவிர, ஜிபியுவில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில், கார்த்திகேய தேவா, பிரியா பிரகாஷ் வாரியர் போன்ற எல்லா நடிகர்களும் தங்கள் கதாபத்திற்கு குறை வைக்காமல் அழகாக நடித்திருக்கின்றனர்.

ரெடின்கிங்ஸ்ளி காமெடியால் தியேட்டர்’….ரை’ குலுங்க வைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளின் போது பழைய ஹிட் பாடல்களைச் இணைத்து நேர்த்தியாக எடிட்டிங் செய்திருகிறார்கள், பாடலின் துடிப்புகளுக்கு ஏற்ப நடனக் காட்சிகள் அருமை, அபி நந்தன் ஒளிபதிவு மற்றும் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை கலக்கல், பாடல்களை பற்றி சொல்லத் தேவையில்லை ஏற்கனவே இணையதளத்தில் பட்டையை கிளப்பியது.

கதை யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், முதல் பாதி படத்தின் குறைபாடுகள் பார்வையாளர்களை பாதிக்காமல் அதிக் ஸ்கோர் செய்திருக்கிறார், இடைவேளையில் வரும் ஆச்சரியமான திருப்பம் உண்மையில் ரசிக்க வைக்கிறது.

ஆதியை நம்பிய அஜித் மோசம் போகவில்லை…ஆதிக் ரவிச்சந்திரன், தனது ஐந்தாவது படமான குட் பேட் அக்லி (GBU) மூலம் ரசிகர்களின் மனதில் ஒரு படி மேலே சென்றுவிட்டார், படம் மரண மாஸ் ஆக இருக்கிறது குட் bad ugly திரைப்படம் ஓவரால் குட்..

What do you think?

நாமக்கல் அருள்மிகு நரசிம்மர், ஆஞ்சநேயர், அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா

பட வாய்புக்காக இப்படியா? வீடியோ எடுப்பது??