in

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலயத்தில் புனித வெள்ளி நிகழ்வு

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலயத்தில் புனித வெள்ளி நிகழ்வு

 

புனித வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலயத்தில் சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்த இயேசு கிறிஸ்துவின் உடல் அடக்கம் செய்வதற்காக எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது, ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

எருசலேம் நகரில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்தார். இந்த நிகழ்வை ஆண்டு தோறும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக துக்கம் அனுசரித்து வருகின்றனர்.

இந்த தினத்தில் ஏசு இறப்பதற்கு முன்பு அனுபவித்த துன்பங்களை நினைவு கூரும் விதமாக சிலுவை பாதைகள் நடத்தியும் அவர் இறந்த பின்பு அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்லும் நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான புனித வெள்ளி நேற்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் உள்ள 200ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியர் ஆலயத்தில் ஏசு கிறிஸ்துவின் உடல் அடக்கம் செய்வதற்காக எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று உடலை சுமந்து சென்றனர் பின்னர் ஏசு கிறிஸ்துவின் பாதங்களை தொட்டு வணங்கி சென்றனர். ஆலய பங்குத்தந்தை தார்சிஸ் ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

What do you think?

காரைக்காலில் உயிர் நீத்த ஏசு பிரானுக்கு மரிக்கொழுந்து மலர் சாற்றி வழிபாடு

திருப்பதி மலைப் பாதையில் தூய்மை பணி