நீயா நானா நிகழ்ச்சி..க்கு வந்த இளைஞரை மாட்டி விட்ட கோபிநாத்
பல காலமாக ஹார்ட் அண்ட் ஹிட் ...டாக ஓடி கொண்டிருக்கும் விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா நிகழ்ச்சி தான்.
அதில் கலந்து கொண்டவர்கள் ஒரே எபிசோடில் மக்களிடையே பிரபலமாகி விடுகின்றனர்.
அப்படித்தான் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு இளைஞர் தற்பொழுது படு ஸ்பீட்….டாக viral …ஆகி வருவதுடன் வசமாக அவரது குடும்பத்தில் சிக்கியும் கொண்டார்.
இந்த வாரம் இரவு நேர உணவை கொண்டாட்டமாக நினைப்பவர்களும் அது தவறு என்று மறுப்பவர்களும் இரண்டு குழு…வாக விவாதிக்க இரவு நேரத்தில் லைட் ஃபுட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுரை கொடுத்தாலும் இன்றைய இளைஞர்கள் இரவு உணவையே ஒரு பார்ட்டியாக வைத்து அல்லோலப்படுத்துகின்றனர்.
இளைஞர் ஒருவர் “தோன்றல்” என்ற உணவு நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டேன் அதற்காக 15 கிலோமீட்டர் பயணம் செய்து அந்த உணவை சாப்பிட்டேன் என்று கூற எதிரணியில் இருந்த ஒருவர் இரவு நேரத்தில் அதிக உணவு உண்பதே தவறு அதுவும் இந்த தம்பி ஈசியாக டைஜஸ்ட் ஆகாத “தோன்றல்” உணவை தேடி சென்றிருக்கிறார் என்று’ கூற அதற்கு மறுப்பு தெரிவிக்க மைக்கை வாங்கிய அந்த இளைஞர்.
சார் நான் பேசுவதை டிவியில் போடுவீங்களா என்று கேட்க கோபிநாத் ஆமாம் நிச்சயம் நாங்கள் டிவியில் டெலிகாஸ்ட் செய்வோம் என்று கூற உடனே அந்த இளைஞர் மைக்கை பக்கத்தில் இருக்கும் நபரிடம் கொடுக்க ஏன் பேச மாட்டீர்களா என்று கோபிநாத் கேட்க நான் பேசினா நீங்க டிவில போடுவீங்க அதை எங்க அம்மா பார்த்துடுவாங்க.
அப்புறம் வீட்டுல மாட்டிக்குவேன் அப்படின்னு அவர் சொல்ல கண்டிப்பா இதைத்தான் நாங்க ப்ரோமோ போடுவோம்னு கோபிநாத் விளையாட்டாக சொல்ல Content கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தில் விஜய் டிவி ப்ரோமோவாக அதையே வெளியிட்டு அந்த இளைஞரை குடும்பத்தில் வசமாக மாட்டி விட்டதோடு இல்லாமல் சமூக வளை தளத்தில் Viral …ஆகி வருகிறார்.