in

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள கோபிநாத சுவாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழா வழுக்குமரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா இன்று நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள கோபிநாத சுவாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. ஒரு வாரம் நடந்த விழாவின் முக்கிய நிகழ்வான வழுக்குமரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா இன்று நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் மலை மேல் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோபிநாத சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் கடந்த ஒரு வார காலமாக கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கோபிநாத சுவாமி மலையில் இருந்து உற்சவமூர்த்தி மலையப்ப சுவாமி, அடிவாரத்தில் ரெட்டியார்சத்திரத்தில் உள்ள முக்கிய கிராமங்களில் உலா வந்து ரெட்டியார்சத்திரத்தில் உள்ள கதிர் நரசிங்க பெருமாள் கோயில் முன்பு இன்று அருள் பாலித்தார்.

இதனை தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்வான வழுக்கு மரம் மற்றும் உறியடி விழா நடைபெற்றது. இதற்கு முன்பாக சிறப்பு பூஜைகள் செய்து 40 அடி உயர வழுக்கு மரம் ஊன்றப்பட்டது. வேலப்பன்பட்டியைச் சேர்ந்த ஆண்கள் ஒரு வார காலம் விரதம் கடைபிடித்து வழுக்கு மரம் ஏறினர். சுமார் 2 மணி நேரம் போராடி வழுக்கு மரம் உச்சி அடைந்து மாலை மற்றும் பொன்முடிகளை அவிழ்த்து இறங்கினர்.

அதனைத் தொடர்ந்து உறியடி திருவிழா நடைபெற்றது. இதில் ராமலிங்கம்பட்டியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணனாக பாவித்து உறியடித்தனர்.

இவ்விழாவினை காண திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, பண்ணைப்பட்டி, ஸ்ரீராமபுரம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து வழுக்கு மரம் ஏறுதல் உறியடித்தல் ஆகிய நிகழ்ச்சிகளை கண்டு களித்து உற்சவர் மலையப்ப சாமியை தரிசனம் செய்து சென்றனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெட்டியார்சத்திரம் காவல்துறையினர் செய்திருந்தனர்.

What do you think?

சாத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி பேராசிரியர் மற்றும் பெட்ரோல் பங்க உரிமையாளர் மனைவியிடம் 20 பவுன் நகை பறிப்பு

96 கிராமங்களில் தாய் கிராம் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித அன்னை வேளாங்கண்ணி மாதா 44 ஆம் ஆண்டு நவநாள் கொடியேற்று விழா