in

அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் இயற்கை முறையில் விளைவித்த பாரம்பரிய நெல் ரகங்கள் அறுவடை

அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் இயற்கை முறையில் விளைவித்த பாரம்பரிய நெல் ரகங்கள் அறுவடை

 

காரைக்கால் அரசு வேளாண் கல்லூரி மாணவர்களே இயற்கை முறையில் விளைவித்த பாரம்பரிய நெல் ரகங்களை களத்தில் இறங்கி அறுவடை செய்து மகசூல் ஈட்டி உள்ள நிலையில் காரைக்கால் மாவட்ட விவசாயிகளும் தங்களது நிலங்களில் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விளைவித்து நல்ல மகசூலும், லாபமும் ஈட்டலாம் என வேளாண் கல்லூரி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உழவியல் துறை சார்பில் ஆண்டுதோறும் 3ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு குறுவை, சம்பா இரு போகத்திற்கு பல்வேறு பயிர்களை பயிரிட வைத்து அதனை அறுவடை செய்ய வைத்து பயிற்சி அளிப்பது வழக்கம்.நடப்பு கல்வி ஆண்டில் 3ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு சுமார் 5செண்ட் நிலம் ஒதுக்கீடு செய்து அதில் இயற்கை முறையில் 3வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு அறுவடை செய்ய வைத்துள்ளனர். தூயமல்லி, கிச்சிலி சம்பா, கருப்பு கவுனி ரக பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்ட வேளாண் கல்லூரி மாணவர்கள், அவர்களே விதைத்து களை எடுத்து இயற்கை உரங்களை பயன்படுத்தி நல்ல மகசூல் எடுத்து தற்போது அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில் முதல்முறை பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விளைவித்து அதனை மாணவ,மாணவிகள் ஆர்வமாக நிலத்தில் இறங்கி அறுவடை செய்து வருகின்றனர். பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி உழவியல் துறை தலைவர் பேராசிரியர் மோகன் மேற்பார்வையில் மாணவர்களே விதை தெளிப்பதிலிருந்து அனைத்து பணிகளும் செய்து தற்போது மாணவர்கள் அறுவடை செய்யும் தருணத்தில் அண்மையில் பெய்த கன மழையிலும் தாக்குபிடித்து நன்கு விளைந்து நல்ல மகசூல் ஈட்டி அரசு வேளாண் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விளைவித்து நல்ல மகசூலை ஈட்டி உள்ளதால் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விளைவித்து நல்ல மகசூல் ஈட்டுவதுடன் நல்ல லாபமும் பெறலாம் என்றும் காரைக்கால் விவசாயிகள் பாரம்பரிய நெல் ரக சாகுபடிக்கு மாற வேண்டும் என வேளாண் கல்லூரி மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வகுப்பறையில் கற்ற கல்வியுடன் களத்தில் இறங்கி வயலை உழுது,விதை தெளித்து,இயற்கை உரங்கள் இட்டு களை எடுத்து, தற்போது அறுவடை செய்வது வரை விவசாயிகளின் அனைத்து பணிகளையும் அனுபவபூர்வமாக ஈடுபட்டு தங்களது முயற்சியில் வெற்றி அடைந்து நல்ல மகசூலும் ஈட்டி உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என பஜன்கோவா வேளாண் கல்லூரி மாணவர்கள் பெருமிதம் அடைந்தனர்.

பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி உழவியல் பேராசிரியர் மோகன் கூறியதாவது: முதல் முறையாக பஜன்கோவா வேளாண் கல்லூரி மாணவர்களை பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்ய வைத்து அதில் வெற்றி கண்டுள்ளதாகவும், இதன் மூலம் காரைக்கால் மாவட்ட மண்வளத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல விளைச்சல் தருவதால் விவசாயிகள் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்து நல்ல மகசூலை ஈட்டும் போது அவர்கள் விளைவித்த பாரம்பரிய நெல் ரகங்களுக்கு சந்தையில் உள்ள மதிப்பு படி விவசாயிகளே விலையை நிர்ணயிக்கலாம் எனவும், பாரம்பரிய நெல் ரகங்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு உள்ளதால் விவசாயிகள் நல்ல லாபம் அடையலாம் என கூறிய மோகன், இதற்கு தங்கள் கல்லூரி மாணவர்கள் முன்னுதாரமாக இருந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

What do you think?

தமிழகம் வளர்ச்சி அடைந்து வருவது மோடிக்கு பிடிக்கவில்லை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் பேச்சு

பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் குரு முதல்வர் குருபூஜை விழா