in

தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்காமல் 65,000 கோடி அளவில் மின்சாரத்தை வெளியில் அரசு வாங்கியுள்ளது

தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்காமல் 65,000 கோடி அளவில் மின்சாரத்தை வெளியில் அரசு வாங்கியுள்ளது

அச்சத்துடன் இருக்கும் கூலிப்படையினர் வெளியே சுதந்திரமாக நடமாடுகிறார்கள், வெளிநாடமாடும் மக்களோ அச்சத்துடன் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழக மக்களுக்கு கடுமையான மின்வெட்டாலும், மின் கட்டண உயர்வாகும் பெரிதும் பாதிக்கப்படுவதை கடந்த கால வரலாறாக தமிழகம் கொண்டு இருக்கிறது .

தற்போது தமிழக மக்களை அனைத்து வகைகளிலும் ஆட்டி வதைப்பதற்கென்று ஒரு ஆட்சி தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழக மக்களின் சுமையை குறைக்க அம்மா அவர்கள் 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை வழங்கி சாதனை படைத்தார்கள்.

இன்றைக்கு திமுக அரசு சொத்து வரி உயர்வு ,குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு ,மின்சார கட்டண உயர்வு,பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு என்று வருகிறது ஆனால் ஆட்சி உயரத்தை பறைசாற்றுவதாக விளம்பரம் வெளிச்சத்திலே தொடர்ந்து அரசு அக்கறை செலுத்தி வருகிறது.

இந்த அரசு மக்களுக்கு உண்மையிலேயே பயன் சென்றடைகிறதா என்பதை எள்முனை அளவு ஆய்வு செய்யாமல், விளம்பர வெளிச்சத்தால் நடைபெறுகிற நாடகம் என்பதை போல,இருட்டு அறையில் உள்ளதடா உலகம் என்கின்ற நிலையிலே தமிழகம் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது

2022,2023,2024 என்று ஆண்டுக்கு ஒரு முறை நிதிநிலை அறிக்கை பட்ஜெட் வெளியிடுவதைப் போல மின் கட்டண உயர்வை வெளியிட்டு வருகிறது, திமுக நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களை பெற்று, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன் தமிழக மக்களின் நெற்றியில் பட்டை நாமத்தை போட்டு மூன்றாவது முறையாக 5% மின் கட்டண உயர்வை பரிசளித்திருக்கிறார்.

அம்மா ஆட்சி காலத்தில் 200 யூனிட் மின்சாரம் 170 ரூபாய்க்கு வழங்கப்பட்டது தற்போது திமுக ஆட்சியில் 235 ரூபாய்க்கு வழங்கப்பட்ட வருகிறது அதேபோல் அதிமுக ஆட்சியில் 300 யூனிட் மின்சாரம் 530 ரூபாய்க்கு வழங்கப்பட்டது தற்பொழுது திமுக ஆட்சியில் 705 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது, 400 யூனிட் மின்சாரம் 830 ரூபாய்க்கு வழங்கப்பட்டது திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது தற்போது 1175 க்கு வழங்கப்படுகிறது,500 யூனிட் மின்சாரம் அதிமுக ஆட்சியில் 1130 ரூபாய்க்கு வழங்கப்பட்டது திமுக தற்போது 1805 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது

மின் கட்டணம் உயர்வு மூலம் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் கிடைக்கக்கூடிய இந்த சூழ்நிலையிலே இன்றைக்கும் மின்வாரியத்தினுடைய நிலை கவலைக்குரியதாக இருப்பதை நாம் பார்க்கிறோம் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு 65,000 கோடி அளவுக்கு மின்சாரத்தை தனியார் நிறுவனம் இருந்து வெளிச்சந்தையில் வாங்குகிற காரணத்தால் தான் இந்த மின் கட்டண உயர்வு இந்த மக்கள் தலைமீது சுமையாக இருக்கிறது.

இரண்டு லட்சம் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் உள்ளது இதில் 15 சதவீத குறு,குறு நிறுவனங்கள் மூடக்கூடிய ஒரு துர்பாக்கிய நிலையிலே,தற்போது விலை ஏற்றத்தால்மீதம் உள்ள 85 சதவீத சிறுகுறு நிறுவனங்கள எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள்? மக்களுடைய வாழ்வாதாரமும் கொரோனா காலத்தால் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாக இருக்கிறது மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று கூறினார்கள்.

கடந்த எட்டு ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை.அதிமுக ஆட்சி காலத்தில் மின்கட்டணத்தை உயர்த்த ஆலோசனை செய்யப்படும் என்று தகவல் கேள்விப்பட்டவுடன் உடனடியாக ஸ்டாலின் போராட்டம் செய்து மின்சாரத்தைத் தொட்டால் சாக்கடிக்கும் ஆனால் மின்சார கட்டணத்தை கேட்டாலே சாக்கடிக்கென்று, வானத்திற்கு பூமிக்கும் குதித்தார் ஸ்டாலின். நிர்வாக சீர்கேட்டால் மக்கள் மீது சுமத்தியது அநியாயம் ஆனால் மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு மற்ற மாநிலங்களுக்கு ஒப்பிட்டு நியாயப்படுத்துகிறார் வாக்களித்த மக்களுக்கு மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு சொல்வது அழகல்ல,

மத்திய அரசு ஆணையின்படி மின்சார வாரியத்தின் இழப்பை அம்மாவின் ஆட்சியிலே, எடப்பாடியார் முதலமைச்சராக இருக்கிறபோது அந்த மின்சார வாரியத்தின் இழப்பை மாநில அரசு ஏற்றுக் கொண்டது.

தமிழகத்தில் 2 கோடி 21 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது இதில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் மாதம் தோறும் அரிசி ,பாமாயில், பருப்பு வாங்குகின்றனர். வெளிச்சந்தையில் ஒரு கிலோ துவரம்பருப்பு 185 ரூபாய்க்கும்,பாமாயில் ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்கிறது.

ஆனால் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பருப்பு 30 ரூபாய்க்கும், பாமாயில் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த அம்மா ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது

2024 ஏப்ரல் முதல் ரேசன் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவற்றை வழங்கப்படவில்லை ஆகவே மின் கட்டணத்தை உயர்வை கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு, சமையல் எண்ணெய் வழங்காதை கண்டித்தும் தமிழக முழுவதும் உள்ள கழக அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க நாளை 23ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

இதனை தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருமங்கலம் தொகுதி உள்ள கள்ளிக்குடியில் நான்கு வழி சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் குடும்பம்,குடும்பமாக பங்கேற்க வேண்டும்.

இந்த அரசு எதையும் காதில் வாங்கிக் கொள்ள நிலையில்தான் உள்ளது இது ஆணவத்தின் உச்சமும் உள்ளது. அரசிற்கு புத்தி புகட்ட வீதியில் போராட்டத்தில் இறங்கி அரசு கவனத்திற்கு கொண்டுவர களத்தில் இறங்கி உள்ளோம்.
நம்மையெல்லாம் ஆடு மாடுகளை விட கேவலமாக நடத்தி இன்றைக்கு மனித நேயமற்ற ஒரு அரசாக கொடுங்கோல் அரசாக இருக்கிறது.

இந்த திமுக அரசில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு இல்லை

அச்சத்தோடு இருக்கும் கூலிப்படையினர் இன்றைக்கு அச்சமில்லாமல் வெளியே நடமாடுகிறார்கள். வெளியே நடமாடும் மக்களோ அச்சத்துடன் உயிரை பாதுகாத்துக் கொள்ள வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள் ஆகவே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் தொழிலாளர்களும் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கூறினார்.

What do you think?

இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா பட்டாபிஷேகம்

நாமக்கல் காளியம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடி பெளர்ணமி திருவிளக்கு பூஜை