அன்னை இந்திரா நகரில் அரசு பள்ளி ஆண்டு விழா
ஆண்டிபட்டி அருகே இலங்கை தமிழர்கள் வசிக்கும் அன்னை இந்திரா நகரில் அரசு பள்ளி ஆண்டு விழா
பரதநாட்டியம் கரகாட்டம் மற்றும் திரைப்படப் பாடல்களுக்கு வண்ண வண்ண உடைய அணிந்து சிறப்பாக நடனமாடிய மாணவ மாணவியர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அன்னை இந்திரா நகரில் அண்டை நாடான இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் 40வது ஆண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கனி தலைமை தாங்கினார்.
விழாவில் முதல் வரவேற்பு நிகழ்ச்சியாக பள்ளி மாணவி ஒருவர் பட்டு உடை அணிந்து நேர்த்தியாக பரதநாட்டியம் ஆடியது.
பண்டை தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
இதே போல முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் அலங்கார வண்ண வண்ண உடை அணிந்து திரைப்படங்களில் வரும் குத்துபாட்டு பழையபாட்டு மற்றும் புதிய பாடல்களுக்கு உற்சாகத்துடன் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
இதையடுத்து தமிழர்களின் மற்றொரு பாரம்பரிய கலையான கரகாட்டத்தை திரைப்பட பாடலுடன் சேர்ந்து ஆடி மாணவிகள் ஆடியதும் அனைவரையும் கவர்ந்தது
மேலும் விழாவிற்கு முன்னதாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாட்டு கட்டுரை ஓவிய போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் அன்னை இந்திரா நகரில் நடைபெற்ற அரசு பள்ளி ஆண்டு விழாவை ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர்.