சிபிஎஸ்சிக்கு மாறியதால் அரசு பள்ளி மாணவர்கள் தமிழக அரசின் பொதுத் தேர்வை எழுதவில்லை
புதுச்சேரிக்கென தனி கல்வி வாரியம் இல்லாத காரணத்தினால் காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கு தமிழ்நாடு கல்வி வாரியத்தை பின்பற்றி வந்தது. இதேபோல் மாகே பகுதி கேரள கல்வி வாரியத்தையும் ஏனாம் பகுதி ஆந்திர வாரியத்தையும் பின்பற்றி வந்தன.
இந்த நிலையில் புதுச்சேரி அரசு நடப்பு கல்வி ஆண்டான 2023-24 முதல் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு மாறி உள்ளது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு மாறிவிட்டன.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிளஸ் 2 தேர்வுகள் துவங்கின. இதில்
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 40 மையங்களில் 14,688 பேர் எழுதினார்கள். இன்று பிளஸ் 1 தேர்வு துவங்கிய நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 40 தேர்வு மையத்தில் 7,642 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டதால் இவ்வாண்டு அரசு பள்ளி மாணவர்கள் யாரும் தமிழக அரசின் பாடத்திட்ட பொதுத்தேர்வு எழுதவில்லை என்பதால் பிளஸ் 1மாணவர் எண்ணிக்கை மிக குறைவு இருந்தது.
அடுத்த கல்வியாண்டு முதல் ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செல்லும். இனி அண்டை மாநில கல்வி வாரியத்தை புதுச்சேரி அரசு நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.