in

சிதம்பரம் அருகே அரசு டவுன் பஸ் சாலை ஓரத்தில் வயலில் கவிழ்ந்து விபத்து

சிதம்பரம் அருகே அரசு டவுன் பஸ் சாலை ஓரத்தில் வயலில் கவிழ்ந்து விபத்து. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் படுகாயம். சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதி

இன்று இரவு சிதம்பரத்தில் இருந்து சேத்தியாத்தோப்பிற்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த டவுன் பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தகநல்லூர் என்ற கிராமத்தின் அருகே பஸ் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வயலில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

பின்னர் இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் தெப்பத் உற்சவ திருவிழா

செஞ்சி நகர சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலார் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு அன்னதானம்