in

போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவு

போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவு

 

புதுச்சேரி… மாகேவில் இருந்து புதுச்சேரிக்கு வந்த அரசு பேருந்தில் நிர்ணயித்த அளவை விட மிக கூடுதலாக பயணிகள் ஏற்றிய விவகாரம்.. துணைநிலை ஆளுநருக்கு மாகே எம் எல் ஏ வீடியோ ஆதாரத்துடன் புகார்.. 
போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவு..

புதுச்சேரியின் மாகே பிராந்தியம் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ளது.அங்கிருந்து தினமும் மாகே-புதுச்சேரி இடையே PRTC எனப்படும் புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது.
52 பேர் அமரக்கூடிய இந்த பேருந்தில் நேற்று இரவு புறப்பட்ட பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பிய நிலையில் அதிகப்படியாக வந்த பயணிகளையும் நடத்துனர் ஏற்றியுள்ளார்.

அவர்கள் நடைபாதையில் அமர்ந்து பயணித்தனர். மிகக் கூடுதலான எண்ணிக்கையில் பேருந்தில் பயணிகள் இருந்ததால் ஏற்கனவே முன்பதிவு செய்து இருக்கையில் அமர்ந்தவர்கள் நடத்துனருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மிக நெருக்கடியாக 10 மணி நேரம் தாண்டி பயணிப்பது மிக கஷ்டம் என்றும் கூடுதல் பயணிகள் ஏற்றுவதால் பேருந்து விபத்துக்குள்ளாகும் எனும் கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் நடத்துனர் அவர்களும் பயணிகள் தான் எனக்கூறி எதிர் வாக்குவாதம் செய்த நிலைல் கூடுதல் பயணிகளுடன் புதுச்சேரிக்கு அந்த பேருந்து வந்தது.

இதனை வீடியோ எடுத்தவர்கள் வைரலாக்கி உள்ளனர். இந்த வீடியோவை மாகியில் அரசுமுறை பயணமாக சென்றுள்ள துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் மாகே சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் காண்பித்து புகாராக தெரிவித்தார். உடனடியாக அவர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

What do you think?

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுச்சேரி மார்க்கெட் வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 334 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்