புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசின் மானியம் வழங்கப்படும்
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களுக்கு அரசின் மானியம் வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்த ஹஜ் பணிகள் நன்றி தெரிவித்துக்கொண்டார்கள்.
இசுலாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டி சார்பில் இந்த ஆண்டு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாஹேவில் இருந்து 78 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள்.
ஹஜ்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு மானியம் வழஙகி வந்த நிலையில் அது கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து புதுச்சேரி மாநில ஹஜ்கமிட்டியின் கோரிக்கையை ஏற்று இந்தாண்டு அரசின் ஹஜ்கமிட்டி சார்பில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசின் மானியம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து புனித ஹஜ்பயணத்தை முடித்துவிட்டு புதுச்சேரி மாநிலத்திற்கு திரும்பிய ஹஜ்பயணிகள் மாநில ஹஜ் கமிட்டி தலைவர் இஸ்மாயில் தலைமையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள்.