in

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பட்டதாரி இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.

சிதம்பரத்தில் 8 வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பட்டதாரி இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது.

சிதம்பரம் அருகே உள்ள சிதம்பரநாதன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் யுவராஜ் 22 இவர் கல்லூரி முடித்துவிட்டு அரசு பணிகளுக்கு தேர்வை எழுதி வரும் நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் சிறுமியுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது, இதனை அடுத்து சிறுமியின் தாய் சண்முகவள்ளி என்பவர் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பட்டதாரி இளைஞரான யுவராஜ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

What do you think?

மரக்காணம் அருகே செல்வ முத்துமாரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வண்டி கேட் பகுதியில் காதலர் தினத்தன்று ஆர் ஆர் பிரியாணி கடை திறப்பு விழா