ஒரே திரையரங்கில் 2 EPIQ திரைகளைக் கொண்ட பிரமாண்ட திரையரங்கம் தஞ்சையில் துவக்கம்
இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரே திரையரங்கில் 2 EPIQ திரைகளைக் கொண்ட பிரமாண்ட திரையரங்கம் தஞ்சையில் துவங்கப்பட்டுள்ளது. இது தஞ்சை மட்டுமல்லாமல் டெல்டா சினிமா ரசிகர்களுக்கே மிகப்பெரிய ட்ரீட்டா அமைந்துள்ளது.
க்யூப் மற்றும் வெற்றி ஈ ஸ்கொயர் சினிமாஸ் இணைந்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் பின்புறம் 3 திரைகள் கொண்ட திரையரங்கை கொண்டு வந்துள்ளது.
அதில் 2 எப்பிக் திரை வசதி கொண்ட இரண்டு அரங்குகளை அறிமுகம் செய்துள்ளனர். அதுவும் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு திரையரங்கில் இரண்டு எப்பிக் திரைகள் உள்ளது திரையரங்கு இதுதான் என கூறுகின்றனர்.
முதல் திரை 65 அடி அகலமும் 34 அடி உயரமும், இரண்டாவது திரை 61 அடி அகலமும் 32 அடி உயரமும் கொண்ட இரண்டு பிரமாண்ட திரையை கொண்டுள்ளது.
இதில் உள்ள ஒவ்வொரு இருக்கையும் திரைப்படத்தை பார்க்கும் போது சிறந்த அனுபவத்தை பெரும் படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த எப்பிக் அரங்கில் BARCO 4K RGB லேசர் புரோஜெக்ட்டர் இடம்பெற்றுள்ளது. இதனால் ஒவ்வொரு காட்சியையும் மிக துல்லியமாக, அதிக பிரகாசமாக, மிக சிறந்த வண்ண அம்சங்களுடன் பார்த்து மகிழ ஆடியோ மற்ற அம்சத்தை பொறுத்தவரை DOLBY Atmos இம்மர்சிவ் ஆடியோ மற்றும் ஸ்கோப் மற்றும் பிளாட் ஃபார்மட்டுகளுக்கு உகந்ததாக 1.9 விகிதத்தைக் கொண்டுள்ளது.
இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த திரையரங்கில் அதிகபட்சமாக டிக்கெட் விலை ரூ.250 எனவும், பார்க்கிங் அதிகபட்சமாக 50-எனவும், திரையரங்கம் இந்த மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.