தனியார் பள்ளியில் நடைபெற்ற தாத்தா பாட்டியர் தினம்
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்க பூபதி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தாத்தாபாட்டியர் தினத்தை முன்னிட்டு பேரக் குழந்தைகளுடன் தாத்தா பாட்டிகள் சந்திப்பு ஏற்படுத்திய பள்ளி நிர்வாகத்தில் பெற்றோர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ரங்கபூபதி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தாத்தா பாட்டியர் தினம் கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தனியார் பள்ளியில் படிக்கும் பள்ளி குழந்தைகளுடன் தங்கள் வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகளை பள்ளிக்கு வரவைத்து அவர்களுக்கு பல்வேறு போட்டிகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மேலும் மிசியூக் சேர், கண்ணாமூச்சி, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் தாத்தா பாட்டிகள் தங்கள் பேரக்குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மேலும் தாத்தா பாட்டிகள் உடன் பேரக்குழந்தைகள் அமர வைத்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டு உடனடியாக தாத்தா பாட்டி குழு படத்தை பள்ளி நிர்வாகத்தினர் வழங்கினர்.
மேலும் பள்ளியின் மாணவ மாணவிகளுடன் தாத்தா பாட்டிகள் கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள் நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் R.P. ஸ்ரீபதி சிறப்புரை ஆற்றி பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குனர் சரண்யாஸ்ரீபதி, முதல்வர் ஜான்சிபிரியா, ஒருங்கிணைப்பாளர் ரத்தினகணபதி, ஆசிரியர்கள் மனோகரி விக்டோரியா, சுகுணா சித்ரா மற்றும் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாத்தா பாட்டிகளுடன் நடைபெற்ற நிகழ்ச்சி பேர குழந்தைகளும் தாத்தா பாட்டிகளும் மகிழ்ச்சியாக இருந்த சம்பவம் பள்ளிக்கு வருகை தந்த பெற்றோர்களிடையேபெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.