in

திருவிடைமருதூரில் ஒரே நாளில் திருக்கோயில்களில் மகா கும்பாபிஷேக பெருவிழா

திருவிடைமருதூரில் ஒரே நாளில் திருக்கோயில்களில் மகா கும்பாபிஷேக பெருவிழா

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் ஒரே நாளில் மகாலிங்க சுவாமி திருக்கோயிலுக்குட்பட்ட தேரடி விநாயகர், ஓரம்ப ஐயனார், பஞ்சரத தேர்மண்டபம், மாணிக்க நாச்சியார் திருக்கோயில்களில் மகா கும்பாபிஷேக பெருவிழா திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்.

மத்தியார்ஜூனமாகவும், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார தலமாகவும், திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாகவும் விளங்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலுக்குட்பட்ட ஸ்ரீ நேரடி விநாயகர், ஓரம்ப ஐயனார், ஸ்ரீ மாணிக்க நாச்சியார் மற்றும் விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் பஞ்சரத திருத்தேர் மண்டபங்கள் வர்ண வேலைப்பாடுகளுடன் திருப்பணிகள் முடிவு பெற்று மகா கும்பாபிஷேகம் பெருவிழா கடந்த 27ஆம் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கி இரண்டு கால யாக பூஜைகளுடன் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தொடர்ந்து நேரடி விநாயகர், பஞ்சரத தேர்மண்டபங்கள், ஓரம்ப ஐயனார், மாணிக்க நாச்சியார் கோயில் விமானங்களுக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் ஓதுவா மூர்த்திகளின் தேவார திருவாசக பதிகங்களுடன் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் திருமுன்னர் மகா கும்பாபிஷேகம் பெருவிழா வெகு விமர்சையாக நடந்தது.

தொடர்ந்து திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயில் வரலாறு மறுபதிப்பு புத்தக‌த்தை திருவாவடுதுறை ஆதினம் வெளியிட அதனை திருவிடைமருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை பேரூராட்சி பெருந்தலைவர் புனித மயில்வாகனன் திருவாவடுதுறை ஆதீன கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

What do you think?

தஞ்சை பெருவுடையார் கோயில் ஐப்பசி மாதம் பிரதோஷ சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை செங்கம் பகுதியில் அவதிக்குள்ளாகும் பள்ளி மாணவிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள்