in

அரசு மருத்துவமனை புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா

அரசு மருத்துவமனை புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா

 

ஒன்றிய அரசு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் உதவியுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல் மட்டும் எடுத்து வைத்துள்ள நிலையில் தமிழக அரசு அதே ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமின் உதவியுடன் மதுரையில் 311 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இன்னும் பத்து தினங்களில் தமிழக முழுவதும் 500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களை முதல்வர் அவர்கள் திறக்க உள்ளார்கள் என நெல்லை மாவட்டம் அம்பாபாசமுத்திரத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனை, மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக 15 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் வகையில் புதிய கட்டிடங்கள்ளுக்கு அடிக்கடி நாட்டுவிழா, பழவூர் மருத்துவமனை கூடுதல் கட்டிடம், வைராவிக்குளம் செவிலியர் குடியிருப்பு உள்பட 1.85 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா ஆகியவை நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் மருத்துவம் மற்றம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூபாய் 15 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி 1.85 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் மருத்துவத்துறைக்கு ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அதிநவீன அறுவைச்சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது, இதுபோன்று சென்னை கிண்டியில் உள்ளது, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இரண்டு அதிநவீன அறுவைச்சிகிச்சை மையம் தமிழகத்தில்தான் உள்ளது.

புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் மையம் தமிழகத்தில் சென்னை , மதுரையில் மருத்துவமனையில் மட்டும்தான் இருந்தது. ஆனால் தற்போது நெல்லை, தஞ்சாவூர், கோவை, சேலம், காஞ்சிபுரம் என 7 இடங்களில் உள்ளது , அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கான கருவிகள் அதி நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பொறுத்தப்பட்டு வருகிறது, திமுக ஆட்சியில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் விரைவாக நடந்து வருவதால் மருத்துவத்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது . ஒரு மாவட்டத்திற்கு ஒரு தலைமை மருத்துவமனைதான், நெல்லை மாவட்டத்திற்கு வள்ளியூரில் அமைய உள்ள நிலையில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் கோரிக்கையை ஏற்று அம்பாசமுத்திரத்தில் தலைமை மருத்துவமனைக்கு இணையாக மருத்துவமனை கட்டப்பட உள்ளது .

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

உண்மையை உடைத்த நடிகை லீனா நாயர்…வைரல் இன்ஸ்ட போஸ்ட்

திருநெல்வேலி மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மேயர் அறிவிப்பு