காப்பீட்டு உதவி கிடைக்கும் வரை மருந்துக்கான செலவை வழங்குவதாக உறுதி
திருநள்ளாறு அருகே எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகி : காப்பீட்டு உதவி கிடைக்கும் வரை மருந்துக்கான செலவை வழங்குவதாக உறுதி.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த விழுதியூர் பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ், கம்பி பிட்டர் தொழில் செய்து வந்த இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் முருகதாஸுக்கு எலும்பு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பத்து தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்த முருகதாஸ் பல்வேறு இடங்களில் உதவி கோரினார். அவரின் நிலையை அறிந்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி நசீர் அகமது முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான 40 ஆயிரம் ரூபாயை முருகதாஸ் குடும்பத்தினரிடம் இன்று வழங்கினர்.
மேலும் காப்பீட்டு திட்ட உதவித்தொகை கிடைக்கும் வரை மருத்துவத்திற்கான உதவித்தொகையை மாதம் தோறும் வழங்குவதாக குடும்பத்தினரிடம் உறுதி அளித்தார்.