in

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க காவலர் கொடி அணி வகுப்பு ஊர்வலம்


Watch – YouTube Click

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க காவலர் கொடி அணி வகுப்பு ஊர்வலம்

 

திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா நுழைவாயில் அருகே மாவட்ட காவல்துறை சார்பில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் 200 க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்ட காவலர் கொடி அணி வகுப்பு ஊர்வலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் துவக்கி வைத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாடாளுமன்ற பொது தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் மற்றும் காவலர்கள் கொடி அணி வகுப்பு ஊர்வலம்.

திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா நுழைவாயிலில் இருந்து நகர மத்திய பேருந்து நிலையம், பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை, அருள்மிகு அருணாசலேஸ்வர திருக்கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக காமராஜர் சிலை வரை சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Watch – YouTube Click

What do you think?

ஜே.பி.நட்டா பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு தனி ஹெலிகாப்டர் மூலம் வருகை

நடிகை கழக மகளிர் அணி துணைச் செயலாளர் செல்வி காயத்ரி ரகுராம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்