in

கின்னஸ் சாதனை படைத்த நடிகர் சிரஞ்சீவி


Watch – YouTube Click

கின்னஸ் சாதனை படைத்த நடிகர் சிரஞ்சீவி

 

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இதுவரை இவர் நடித்த 156 படங்களில் 537 பாடல்களில் 24 ஆயிரத்திற்கு மேற்பட்ட நடன அசைவுகளை கொடுத்து நடனமாடியதாக இவருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடிகர் அமீர் கான் சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனை விருதை வழங்கி உள்ளார்.

விருது கொடுத்த பிறகு அமீர்கான் சிரஞ்சீவி பற்றி பெருமையாக கூறியுள்ளார், சிரஞ்சீவியின் தீவிர ரசிகன் நான் அவர் எல்லா பாடல்களிலும் திறமையாக நடனம் ஆடி இருப்பார்.

கஷ்டமான நடனங்களை கூட ஈசியாக ஆடிவிடுவார் அதுதான் அவருடைய திறமை விருதை, பெற்றுக்கொண்ட சிரஞ்சீவி கூறியதாவது எனது திரையுலக வாழ்க்கையில் நடனத்திற்கு நான் எப்பவும் முக்கிய பங்களிப்பு கொடுத்திருக்கிறேன்.

நடிப்பைவிட எனக்கு நடனம் ஆடுவதில் தான் அதிக ஆர்வம் இருந்தது இந்த கின்னஸ் சாதனை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

மீண்டும் ஜெயம் ரவியுடன் பூமிகா

திருவாரூர் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு