in

திருவாரூர் அருகே திமுக ஒன்றிய பெருந்தலைவரை துப்பாக்கியால் தாக்குதல்

திருவாரூர் அருகே திமுக ஒன்றிய பெருந்தலைவரை துப்பாக்கியால் தாக்குதல்

 

திருவாரூர் அருகே திமுக ஒன்றிய பெருந்தலைவரை துப்பாக்கியால் தாக்குதல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி . வைப்பூர் போலீசார் விசாரணை .

திருவாரூர் அருகே பழையவலம் கிராமத்தை சேர்ந்தவர் துரை. தியாகராஜன் 70 திமுக ஒன்றிய பொருளாளர் மற்றும் திருவாரூர் ஒன்றிய துணை பெருந்தலைவராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் 50 இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் வாகனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்ற உள்ளது அப்போது மகேந்திரன் பணி முடிந்து வீடு திரும்பியதாகவும் அப்போது காவடி ஆடிக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் ஹாரன் அடித்து நகர சொல்லி உள்ளார் அங்கிருந்த ஒன்றிய துணை பெரும் தலைவர் தியாகராஜன் காவடி ஆடும் போது நின்று செல்ல முடியாதா? என கேட்டதாகவும் இதனால் ஏற்பட்ட தகராறில் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஒன்றிய துணை பெருந்தலைவர் முகத்தில் மகேந்திரன் தாக்கியுள்ளார்.

இதனால் அங்கு நின்று இருந்த தியாகராஜனின் மகன் மற்றும் அவரது சகோதரர் தடுக்க முயன்று உள்ளனர் . உடனடியாக தியாகராஜன் மகேந்திரன் இடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து வைப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

காயம் அடைந்த தியாகராஜன் மற்றும் அவரது மகன் ஆசைத்தம்பி இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மகேந்திரன் மற்றும் அவரது மகன் கோகுலகிருஷ்ணன் அரசு மருத்து கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ‌.

குறிப்பாக மகேந்திரன் ஏற்கனவே இரண்டு முறை துப்பாக்கியால் அவரது தந்தையை தாக்கியதாகவும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரை துப்பாக்கியால் மிரட்டியதாக வைப்போர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மகேந்திரன் தற்போது திருவாரூரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தரப்பும் அளித்த புகாரின் பேரில் தியாகராஜன் தரப்பில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What do you think?

மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை மிரட்டிய பெண்

குதிரைகளால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி