in

தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் துப்பாக்கி என்ற போலீஸ் பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் துப்பாக்கி என்ற போலீஸ் பாதுகாப்பு

 

நெல்லை மாவட்ட நீதிமன்ற முன்பாக கொலை குற்றவாளி மாயாண்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் துப்பாக்கி என்ற போலீஸ் பாதுகாப்பு டிஜிபி அறிவித்தலை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கீழநத்தம் பகுதியில் சேர்ந்த மாயாண்டி கீழநத்தம் வார்டு கவுன்சிலர் ராஜாமணியை ஜாதிய ரீதியாக கொலை செய்த வழக்கு சம்பந்தமாக கடந்த 20ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வந்தபோது நீதிமன்றத்தின் வாயிலேயே அவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு வாயிலேயே இது போன்ற படுகொலை சம்பவத்தால் பொதுமக்கள் எப்படி நீதிமன்றத்தை நாட முடியும் சாட்சிகள் சொல்லக்கூடியவர்கள் எப்படி நீதிமன்றத்திற்கு பயமில்லாமல் வருவார்கள் என பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தது மேலும் இது தொடர்பாக தனது அறிக்கையை வழங்குமாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசாரம் கவனக்குறைவாக இருந்ததன் காரணமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸா? பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதான புரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள் நெல்லை மாநகர கிழக்கு காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் கையில் துப்பாக்கி ஏந்தியும் பிஸ்டன் உள்ளிட்ட துப்பாக்கிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் யாராவது இதுபோன்ற பிரச்சனைகள் ஈடுபட்டால் முதலில் வானத்தை நோக்கி சுடவும் அதன் பிறகு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அவர்கள் காலில் சுடலாம் அதற்கும் அவர்கள் இங்கே இருந்து செல்லவில்லை என்றால் உங்களுக்கு சுடுவதற்கான அதிகாரத்தை நாங்கள் வழங்குகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். காவலர்கள் கவனமாக இதனை கையாள வேண்டும் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வரும் ஒவ்வொரு நபர்களும் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

நெல்லை திருச்செந்தூர் சாலையில் ஆறு இடங்களில் செக்போஸ்ட் வைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கை செய்யபடுகிறது. அதுமட்டுமில்லாமல் இரண்டு பைக்குகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற வாசலுக்கு எதிரே வாகனங்கள் நிறுத்த தடை என போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்…

What do you think?

நெல்லை மாவட்டத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொல்லம் எடுத்துச் செல்லப்படுகிறது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாருதி 800 கார் நடுரோட்டில் தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு