in

பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் குரு முதல்வர் குருபூஜை விழா

பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் குரு முதல்வர் குருபூஜை விழா

 

பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் குரு முதல்வர் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டிணப்பிரவேசம், சிவிகை பல்லக்கில் ஆதீன மடாதிபதியை பாரம்பரிய முறைப்படி சுமந்து சென்ற பக்தர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தை தோற்றுவித்த குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூசை விழா அவர் அவதரித்த தை மாதம் அசுபதி நட்சத்திர நாளில் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதற்கான விழா கடந்த 24ஆம் தேதி ஆதீனத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பட்டிணப்பிரவேசம் நேற்று இரவு துவங்கி இன்று அதிகாலை வரை விடிய விடிய நடைபெற்றது. இதற்காக ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சீடர்களுடன் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட நாதஸ்வர வித்வான்கள் தவில் வித்வான்கள் மங்கள வாத்தியங்களை முழங்க வாண வேடிக்கைகளுடன், குதிரைகள் யானை இவற்றுடன் பட்டிணப்பிரவேச சிவிகை பல்லக்கு நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஆதீன குரு மகா சன்னிதானத்தை பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி திருவாவடுதுறை ஆதீனத்தின் முக்கிய வீதிகள் வழியே சுமந்து சென்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்வேறு ஆதீனம் மடாதிபதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

What do you think?

அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் இயற்கை முறையில் விளைவித்த பாரம்பரிய நெல் ரகங்கள் அறுவடை

மறைந்த பழம்பெரும் நடிகை புஷ்பலதா