in

63 நாயன்மார்களில் ஒருவரான நேச நாயனார் குருபூஜை விழா

63 நாயன்மார்களில் ஒருவரான நேச நாயனார் குருபூஜை விழா

 

63 நாயன்மார்களில் ஒருவரான நேச நாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு, புனுகிஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிவபூஜை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இந்திரன் புனுகு பூனை வடிவத்தில் இறைவனை பூஜை செய்த புனுகீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தில் 63 நாயன்மார்களில் சாலிய வகுப்பைச் சேர்ந்த நெசவுத்தொழில் செய்து வந்த நேச நாயனாருக்கு தனியாக சன்னதி அமைந்துள்ளது.

பங்குனி மாதம் ரோகினி நட்சத்திர தினத்தன்று இவர் இறைவன் உள்ளே ஐக்கியமானதாக புராண வரலாறு கூறுகிறது.

அதன்படி இன்று பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள நேச நாயனார் சன்னதியில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான சிவனடியார்கள் சிவ பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா..

தஞ்சாவூர் ராஜராஜசோழன் மணிமண்டபம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை