in

ரசிகர்களை அழ வைத்த ஜிவி பிரகாஷ் சைந்தவி

ரசிகர்களை அழ வைத்த ஜிவி பிரகாஷ் சைந்தவி

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் 11 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிந்ததாக அறிவித்தார்.

ஜெயம் ரவி, தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பிரிந்தவர்களில் இவர்களும் ஒருவர்.பிறிவிற்கு பிறகு சைந்தவியும் ஜிவி பிரகாஷ்..சும் அண்மையில் ஒரு கச்சேரியில் இணைந்து பாடுவதாக செய்தி வெளியானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை, மலேசியாவில் ஜி.வி.பிரகாஷின் கச்சேரியில் சைந்தவி தனது சூப்பர்ஹிட் பாடலான ‘பிறை தேடும் பாடலை பாடினார். நட்பு, பாசம் மற்றும் தொழில் மரியாதை ஆகியவற்றின் சாட்சியாக இவர்கள் மாறினார்கள்.

இது குறித்து சைந்தவியிடம் கேட்ட பொழுது பர்சனல் வாழ்க்கையில் எங்களுக்குள் பிரச்சனை இருந்தாலும் தொழில் ரீதியாக ஒருவர் மேல் ஒருவர் மரியாதையோடு நடந்து கொள்வோம். இவர்கள் இருவரும் இசைக்கச்சேரியில் பிறை தேடும் இரவிலே ’ பாடலை இணைந்து பாடியவுடன் ரசிகர்கள் எமோஷனல் ஆகி ஆரவாரம் செய்தனர் .மேலும் இந்த பாடலை பாடும் பொழுது சைந்தவியும் EMOTIONAL..லாகி கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது. இந்த பாடல் இடம் பெற்ற மயக்கம் என்ன படத்தில் ஒரு மனைவி தன்னுடைய கணவனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை அவரது லட்சத்திற்காக போராடுவாள் இந்த பாடல் இவர்கள் வாழ்க்கையிலும் கனெக்ட் ஆகி இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்திருகின்றனர்.

மேலும் நிகழ்ச்சியின் போது பிரகாஷ் ..இன் குழந்தை மேடைக்கு வர வேண்டும் என்று அழைக்க சைந்தவியும் ஜிவி பிரகாஷிடம் குழந்தையை அனுப்பி வைத்தார் தன்னுடைய குழந்தை ஓடிவந்து அணைத்துக் கொண்டார்.G.V. சைந்தவியின் குரலை கேட்ட ரசிகர் ஒருவர் இந்த பாடலின் மூலம் தன்னுடைய இதயத்தை உடைந்த விட்டார் என்று பதிவிட்டிருக்கிறார்.. ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரையும் அவர்களின் தொழில்முறை மற்றும் பரஸ்பர மரியாதைக்காக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

What do you think?

வேண்டாம் கடவுளே அஜித்தே…. நிறுத்துங்கடா கோஷத்தை …. ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த அஜீத்

ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி ..யுடன் நடிக்கும் தனுஷ்